• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் இன்று 7ஆம் கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் இன்று 7ஆம் கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

தடுப்பூசி முகாம்

தடுப்பூசி முகாம்

தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றுவருகிறது.

  • Share this:
    கொரோனா 3ஆவது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி, தமிழகத்தில் 7ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த மெகா தடுப்பூசி முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாமை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி 40 ஆயிரம் இடங்களில் 28.91 லட்சம் பேருக்கும், 19ஆம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 16.43 லட்சம் பேருக்கும், 26ஆம் தேதி 23 ஆயிரம் இடங்களில் 25.04 லட்சம் பேருக்கும், அக்டோபர் 3ஆம் தேதி 20 ஆயிரம் இடங்களில் 17.04 லட்சம் பேருக்கும், கடந்த 10ஆம் தேதி 32 ஆயிரம் இடங்களில் 22.85 லட்சம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மதுபிரியர்கள் மற்றும் இறைச்சி சாப்பிடுபவர்களுக்காக ஞாயிற்றுக்கிழமையில் நடைபெற்று வந்த மெகா கொரோனா தடுப்பூசி முகாம் கடந்த வாரம் முதல் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அதன்படி, கடந்த 23ஆம் தேதி 6ஆவது கட்டமாக 50 இடங்களில் நடைபெற்ற மெகா முகாமில் 22.33 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இது வரையில் தமிழகத்தில் 1 கோடியே 33 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 60 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். அவர்களை கண்டறியும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், 7ஆவது கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றுவருகிறது.

    Must Read : School Holiday : கனமழை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை; புதுச்சேரியிலும் விடுமுறை

    அதன்படி, சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த மெகா தடுப்பூசி முகாம் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இது, இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: