திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் 76 டாஸ்மாக் கடைகள் திறப்பு..!

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட 14 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் 76 டாஸ்மாக் கடைகள் திறப்பு..!
டாஸ்மாக் கடை (கோப்புப் படம்)
  • Share this:
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று முதல் 76 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு மே 7-ஆம் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் மே 8-ஆம் தேதி மாலை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் காரணமாக மூடப்பட்டன. இந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து, தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர பிற இடங்களில் 16-ஆம் தேதி காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.


இந்நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 76 டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் மற்றும் குடையுடன் வருபவர்களுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என்றும், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

உத்தரவை மீறி மது வாங்க வருபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வடக்கு பகுதியில் 147 மதுபானக் கடைகள் உள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குட்பட்ட 14 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுகிறது.Also see...


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.

First published: May 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading