தேனியில் ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த 75 வயது முதியவர்.. கழுத்தை நெரித்து படுகொலை செய்த இளைஞர்..

கோப்புப் படம்

தேனியில் ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த முதியவரின் கழுத்தை நெரித்து படுகொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  • Share this:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு பொன்ராம் (75) என்ற முதியவர் வீட்டில் தனது படுக்கையில் இறந்துக் கிடந்துள்ளார். இந்த சாவில் மர்மம் உள்ளதாக அவரின் மகள் மாரியம்மாள் தேவதானபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், முதியவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் முடிவில், முதியவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் முதியவரின் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முதியவரின் வீட்டிற்கு நாள்தோரும் அதே பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அருண்குமார் (26) என்ற இளைஞர் வந்து செல்வார் என தெரியவந்தது. இதையடுத்து அருண்குமாரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

Also read: சென்னையில் வேறொருவருடன் தொடர்பிலிருந்த மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன் போலீஸில் சரண்... பிள்ளைகள் தவிப்பு..

விசாரணையில், அருண்குமாரும் அவரின் நண்பரும் தொடர்ச்சியாக ஓரினச்சேர்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், அந்த நண்பர் திருமணமாகிச் சென்றுவிட்டதால் அருண்குமார் மது போதையில் முதியவரின் வீட்டிற்குச் சென்று, உறங்கிக்கொண்டிருந்த முதியவரிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றதாகவும் ஒப்புக்கொண்டார். முதியவர் அதற்கு இணங்க மறுத்து சத்தமிட்டதால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டதாக அருண்குமார் வாக்குமூலம் பகீர் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தொடர்ந்து அருண்குமார் மீது  தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். முதியவர் கொலை சம்பவம் குறித்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி நேரில்  விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து, கைது செய்யப்பட்ட அருண்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: