ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000... சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி சொன்ன குட் நியூஸ்

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000... சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி சொன்ன குட் நியூஸ்

பொங்கல் தொகுப்பு

பொங்கல் தொகுப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு உடன் ரூ.1000 வழங்குவது தொடர்பான கேள்விக்கு சட்டசபையில் அமைச்சர் சக்கரபாணி பதில் அளித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சட்டப்பேரவையில், பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக நத்தம் விஸ்வநாதன் கேள்வி எழுப்பினார். அதில், எப்போது தேர்தல் வந்தாலும் முதலமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளவர் எடப்பாடி பழனிசாமி. ஆளுநர் உரையில் பொங்கல் தொகுப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. பழனிசாமி ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் கரும்புடன் , பொங்கல் வைப்பதற்கான பொருட்களும் கொடுத்தோம். அப்போது 2500 ரூபாய் என கிள்ளி கொடுக்க வேண்டாம் 5000 ரூபயாக அள்ளி கொடுக்கலாம் என்றார் அப்போதைய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். எங்களிடம் வைத்த கோரிக்கையை இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கலாம் என்றார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, கொரோனா காலத்தில் தேர்தல் வாக்குறுதியின்படி ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 4000 ரூபாய் வழங்குவதாக முதலமைச்சர் தெரிவித்தற்கிணங்க வழங்கினார். 2018 -2019ம் ஆண்டுகளில் ஆயிரம் ரூபாய் அதிமுக ஆட்சியில் வழங்கினார்கள். கொரோனா காலம் என்பதால் மட்டுமே 5000 ரூபாய் கொடுக்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

2021ம் ஆண்டு 2500 ரூபாய் பொங்கல் பரிசாக தேர்தலுக்காக வழங்கியது என்பது மக்களுக்கே தெரியும் என்றும் குறிப்பிட்டார். அதனால் தான் மக்கள் அதை வாங்கிக்கொண்டு ஏமாறாமல் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலினை தேர்ந்தெடுத்தனர் என. 2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருவதாகவும், நண்பகல் 1.30 மணி நிலவரப்படி 75% மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் அமைச்சர் எ.வ. வேலு பேசிய போது. 2001 ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. பொங்கல் தொகுப்பை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது திமுகதான், அதிமுக அல்ல. தேர்தலில் கூறிய அனைத்தையும் முதல் ஆண்டிலேயே செய்து முடிக்க முடியுமா..? 5 ஆண்டு முடிவில் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் செய்து முடிப்பார். ரூ.6 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு இப்பொழுது ஏதுமே செய்யவில்லை என்பது நியாயமா..? என்றும் தெரிவித்தார்.

First published: