ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணி - ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கீடு

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணி - ரூ.75.28 கோடி நிதி ஒதுக்கீடு

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள முதற்கட்டமாக 75.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

தமிழகத்தில் இருக்கக்கூடிய 59 அரசு மருத்துமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைப்பதற்கும், சலவையகம், மத்திய கிருமி நீக்க மையம் ஆகியவற்றை வலுப்படுத்தவும், பயன்படுத்தவும் கடந்த ஏப்ரல் மாதம் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அவர்களின் பரிந்துரைகளுக்கு தமிழக அரசு சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதற்கட்டமாக 75.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு மருத்துவ இயக்குநரகத்தின் கீழ் செயல்படும் 32 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மொத்தம் 35 கோடியே 97 லட்சமும், 5 அரசு மருத்துவக் கல்லூரி சார்ந்த கல்வி நிறுவனங்களுக்கு மொத்தம் 4 கோடியே 27 லட்சமும்,

200 படுக்கை வசதிக்கு மேல் இருக்கும் 21 அரசு மருத்துமனைகளுக்கு 31 கோடியே 69 லட்சமும், கிங்க் இன்ஸ்டிட்யூட்க்கு 3 கோடியே 33 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.  அதன்படி மொத்தம் 75 கோடியே 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

First published:

Tags: Govt hospitals