ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நிவர் புயல் பாதிப்பை சீர் செய்ய முதற்கட்டமாக 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு... வீடுகள், மின்கம்பங்கள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை

நிவர் புயல் பாதிப்பை சீர் செய்ய முதற்கட்டமாக 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு... வீடுகள், மின்கம்பங்கள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை

நிவர் புயல் பாதிப்பை சீர் செய்ய முதற்கட்டமாக 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு... வீடுகள், மின்கம்பங்கள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை

நிவர்புயல் பாதிப்புகளை சீர்செய்ய தமிழக அரசு முதற்கட்டமாக 74 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நிவர் புயல் பாதிப்புகளை சீர்செய்ய முதற்கட்டமாக 74 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த மத்தியக்குழுவினர், நேற்று முதலமைச்சரை சந்தித்தனர். இந்த நிலையில், புயலால் சேதமடைந்த வீடுகள், மின்கம்பங்கள், சாலைகளை சீரமைக்க 74 கோடி ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதையடுத்து  காலை வேளாங்கண்ணிக்குச் சென்ற முதலமைச்சர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

மேலும் படிக்க...சீரியல் நடிகை சித்ராவின் கடைசி வீடியோ பதிவு

தொடர்ந்து வேளாங்கண்ணியை அடுத்த கருங்கன்னிக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மழையால் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட்டு அங்கிருந்த விவசாயிகளிடம் சேத விவரங்களை கேட்டறிந்தார். சுமார் 392 ஏக்கரில் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறினர்.

அதன் பின்னர் நாகூர் தர்காவிற்குச் சென்ற முதலமைச்சர் பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள ஆண்டவர் சன்னதி அறைக்கு சென்ற முதல்வர், தொப்பி அணிந்து தொழுகையில் ஈடுபட்டார். பின்னர் கனமழையால் சேதமடைந்த தர்கா குளத்தின்  சுற்றுச்சுவர் மற்றும் கீழ்க்கரை சாலைப் பகுதிகளை பார்வையிட்டார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: CM Edappadi Palaniswami, Cyclone Nivar, Relief work