சென்னையில் டெங்கு பாதித்த 73 பேருக்கு சிகிச்சை... கட்டட உரிமையாளர்களுக்கு ₹1 லட்சம் வரை அபராதம்...!

சென்னையில் டெங்கு பாதித்த 73 பேருக்கு சிகிச்சை... கட்டட உரிமையாளர்களுக்கு ₹1 லட்சம் வரை அபராதம்...!
டெங்கு சிகிச்சை பிரிவு
  • News18
  • Last Updated: October 16, 2019, 11:04 AM IST
  • Share this:
சென்னையில் அக்டோபர் மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 73 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு கொசு உருவாவதை தடுக்கத் தவறிய கட்டட உரிமையாளர்களிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில், டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்றுகள் பரவாமல் இருக்க 500 வீடுகளுக்கு ஒரு பணியாளர் என நியமித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். கொசு உண்டாவது போன்ற சூழல் அலுவலகங்களிலோ வீடுகளிலோ கட்டிடங்களிலோ தொடரும் பட்சத்தில் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.

தனியார் வீடுகள், கடைகள், பொது கட்டடங்களில் டெங்கு ஆய்வின் போது கொசு, லார்வா, பியூப்பா நிலைகளில் கண்டறியப்பட்டால் வீடுகளுக்கு முதல் முறை நோட்டீஸ் வழங்க வேண்டும். இரண்டாவது முறை 150 ரூபாயும், மூன்றாம் முறை 500 ரூபாயும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரையும், ஆலைகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும். அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு 50 பெட்களுக்கு மேல் இருந்தால் ஒரு லட்சம் ரூபாய் வரையும், பள்ளி, கல்லுாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் வரையும் அபராதம் விதிக்கப்படும். அரசு கட்டடங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். விடுதிகள், வணிகக் கட்டடங்களுக்கு ஒரு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று முறைகளுக்கு மேல், சுகாதார நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சீல் வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னை மாநகராட்சியில் இதுவரை 8,929 கட்டடங்கள், 387 அரசு மருத்துவமனைகள், 652 தனியார் மருத்துவமனைகள், 1,737 அரசு கட்டடங்கள், 5,520 வீடுகள், 25,334 காலி இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வுகளில் இதுவரை 38 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட கோரிய வழக்கில் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. அதில், நடப்பு ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 ஆயிரத்து 223 பேரில் 3 பேர் மட்டுமே உயிரிழந்து இருப்பதாக அரசு விளக்கமளித்துள்ளது. டெங்கு கொசுக்களை அழிப்பதற்காக தமிழகம் முழுவதும் 28 ஆயிரத்து 147 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் 125 மையங்கள் அமைக்கப்பட்டு ஒரு கோடியே 7 லட்சம் பேருக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

Also watch
First published: October 16, 2019, 11:04 AM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading