வேலூர் மக்களவைத் தேர்தலில் 72% வாக்குகள் பதிவு!

மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் போதிய அளவு ஈடுபாடு காட்டவில்லை என்பது தெரிகிறது.

வேலூர் மக்களவைத் தேர்தலில் 72% வாக்குகள் பதிவு!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: August 5, 2019, 11:07 PM IST
  • Share this:
வேலூர் மக்களவைத் தொகுதியில் 72% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலின் போது பண பட்டுவாடா புகார் எதிரொலியாக வேலூர் தொகுதிக்கு மட்டும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், தேர்தல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதிக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை ஆறு மணி வரை நடைபெற்றது.

வாக்குப் பதிவு நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சண்முகசுந்தரம், ‘வேலூர் தொகுதியில் 72% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குபதிவின் போது 22 விவிபாட் இயந்திரங்கள் பழுதானது. அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. கடந்த தேர்தலை விட  வாக்குபதிவு அளவு 4% குறைவு.


வாக்குபதிவின் போது 35 புகார்கள் வந்தது. அதுகுறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் எதுவுமில்லை. சிறிய பிரச்சனைகள் குறித்த புகார்கள் தான் வந்தன.
வாக்குபதிவு இயந்திரம் நான்கும், கட்டுப்பாட்டு கருவிகள் இரண்டும் வாக்குபதிவின் போது பழுதானது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவிற்கான அனைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. ஆனால் பொதுமக்கள் போதிய அளவு ஈடுபாடு காட்டவில்லை என்பது தெரிகிறது.முதல்முறையாக வாக்களிப்பவர்கள், வெளியூர்களில் தங்கி படிக்க கூடிய மாணவர்கள் முறையாக விடுமுறை எடுத்து வரவில்லை என்பது தெரிகிறது. பணப்பட்டுவாடா குறித்து எந்தப் புகாரும் இதுவரை வரவில்லை. மனோ, பாஸ்கர் என்கிற இரண்டு பேர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக செய்திகள் வந்தன.

ஆனால் யாரும் புகார் அளிக்கவில்லை. பணமும் கைப்பற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒத்துழைப்பு அதிக அளவில் இருந்தது. அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள். நான், சென்னையிலும் வேலூரிலும் ஓட்டுபதிவு செய்ததாக வதந்தி பரவியுள்ளது. ஆனால் எனக்கு சென்னையில் வாக்குப் பதிவு செய்யும் உரிமை இல்லை. இதுவரையில்

கைப்பற்றபட்ட பணம் 2 கோடியே 39 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் ஆகும். மதுபானம், தங்கம், வெள்ளி என மொத்தம் 3 கோடியே 35 லட்சத்து 29 ஆயிரம் மதிப்பில் மாவட்ட நிர்வாகத்தால் கைப்பற்றப்பட்டுள்ளன’என்று தெரிவித்தார்.

Also see:

First published: August 5, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்