தமிழகத்தில் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்! மத்திய அமைச்சர் உறுதி

தமிழகத்தில் 23 இடங்களிலும், குஜராத்தில் 232 இடங்களிலும் என்று நாடு முழுவதும் 705 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும் 31,996 கோடி ரூபாய் செலவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவுள்ளது

news18
Updated: June 25, 2019, 7:32 AM IST
தமிழகத்தில் 23 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள்! மத்திய அமைச்சர் உறுதி
மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்
news18
Updated: June 25, 2019, 7:32 AM IST
தமிழகத்தில் 23 இடங்களில் உள்பட நாடு முழுவதும் 705 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும் என்று பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கக் கூடாது என்று கடந்த ஞாயிற்றுக் கிழமை ராமேஸ்வரம் முதல் மரக்காணம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க, ம.தி.மு.க, வி.சி.க, இடதுசாரி கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி ஆகிய அரசியல் கட்சிகளும், பொதுமக்களும், விவசாயிகளும் பங்கேற்றனர். தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்தநிலையில், மக்களவை கூட்டத் தொடரில் பேசிய தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ‘தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் எத்தனை இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படவுள்ளது என்று எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார்.

அவருடைய கேள்விக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பதிலில், ‘தமிழகத்தில் 23 இடங்களிலும், குஜராத்தில் 232 இடங்களிலும் என்று நாடு முழுவதும் 705 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்படும் 31,996 கோடி ரூபாய் செலவில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்படவுள்ளது’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: June 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...