ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வேலூரில் ஒரே நாளில் 7 ஆயிரம் வாத்துக் குஞ்சுகள் உயிரிழப்பு: பறவைக் காய்ச்சலா?

வேலூரில் ஒரே நாளில் 7 ஆயிரம் வாத்துக் குஞ்சுகள் உயிரிழப்பு: பறவைக் காய்ச்சலா?

வேலூரில் ஒரே நாளில் 7 ஆயிரம் வாத்துக் குஞ்சுகள் உயிரிழப்பு: பறவைக் காய்ச்சலா?

வேலூர் மாவட்டம், திருவலம் அருகே ஒரே நாளில் 7 ஆயிரம் வாத்து குஞ்சுகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சஞ்சீவிராயபுரத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர், 40 நாட்களுக்கு முன்பு தருமபுரியில் இருந்து ஏழாயிரம் வாத்துக் குஞ்சுகளை வாங்கி வந்திருக்கிறார். வாத்துக்குஞ்சுகளை மேய்ச்சலில் ஈடுபடுத்துவதற்காகவே பாலாற்றங்கரையோரம் கூடாரம் அமைத்து சுதாகர் தங்கியுள்ளார். இந்நிலையில் பாலாற்றில் வழக்கம் போல மேய்ந்து கொண்டிருந்த வாத்துக் குஞ்சுகள் திடீரென ஒவ்வொன்றாக தண்ணீரில் செத்து மிதக்கத் துவங்கின. செய்வதறியாமல் திணறிய சுதாகர், கால்நடை பராமரிப்பு துறைக்கு தகவல் தெரிவித்திருக்கிறார்.

  ஆனால் ஒரு சில மணி நேரத்திற்குள் ஏழாயிரம் வாத்துக் குஞ்சுகளும் துடிதுடித்து உயிரிழந்தன. உயிரிழந்த வாத்துக்களின் மாதிரிகள், ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பறவைக்காய்ச்சலால் உயிரிழந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

  மேலும் படிக்க... ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை - யார் காரணம்?

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Bird flu, Vellore