700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை மீட்கப்பட்டது எப்படி?

டெல்லியில் சிலையைப் பெற்றுக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு வெள்ளிக்கிழமை (நாளை) காலை சென்னைக்கு சிலையை கொண்டு வருகிறது.

news18
Updated: September 12, 2019, 9:06 AM IST
700 ஆண்டுகள் பழமையான நடராஜர் சிலை மீட்கப்பட்டது எப்படி?
நடராஜர் சிலை
news18
Updated: September 12, 2019, 9:06 AM IST
37 ஆண்டுகளுக்கு முன் கொள்ளையடிக்கப்பட்ட நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நடராஜர் சிலை, ஆஸ்திரேலியாவில் இருந்து சிறப்பு புலனாய்வுக்குழுவால் மீட்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ளது 700 ஆண்டுகளுக்கு முன் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட குலசேகரமுடையார் கோவில். 1982ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி இந்த கோவிலின் கதவுகள் உடைக்கப்பட்டு நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் மற்றும் விநாயகர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. ஆனால், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறி 1984ம் ஆண்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


இந்த நிலையில் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் பொன், மாணிக்கவேல் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

அதில், நடராஜர் சிலை ஆஸ்திரேலிய நாட்டின் அடிலெய்ட் நகரில் உள்ள ஆர்ட் கேலரி ஆப் சவுத் ஆஸ்திரேலியா என்ற தனியார் மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அந்த சிலை கல்லிடைக் குறிச்சி கோவிலுக்கு உரியதுதான் என்பதற்கான ஆவணங்களையும் திருடு போனதற்கான ஆவணங்களையும் சிறப்பு புலனாய்வுக் குழு சேகரித்தது.

Loading...

ஆவணங்களை மத்திய தொல்லியல் துறையிடமும் ஆஸ்திரேலிய அரசிடமும் சமர்ப்பித்தது சிறப்பு புலனாய்வுக் குழு.

அவற்றின் அடிப்படையில், சிலையைத் திருப்பித் தர சம்பந்தப்பட்ட தனியார் மியூசியமும் ஆஸ்திரேலிய அரசும் முன்வந்தன. மியூசியம் பதிவாளரின் சொந்தச் செலவில் நடராஜர் சிலை விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்பட்டது.

டெல்லியில் சிலையைப் பெற்றுக் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு வெள்ளிக்கிழமை (நாளை) காலை சென்னைக்கு சிலையை கொண்டு வருகிறது.

இதுகுறித்து சிறப்பு புலனாய்வுக் குழு வெளியிட்ட அறிக்கையில் சிலையின் இன்றைய மதிப்பு 30 கோடி ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும், கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலை ஒப்படைக்கப்பட்டு குலசேகரமுடையார் கோவிலில் வழிபாட்டிற்கு வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...