ஞாயிறு ஊரடங்கு: தமிழகத்தில் நான்கு சனிக்கிழமைகளில் மட்டும் ₹700 கோடிக்கு மது விற்பனை..

கோப்புப் படம்.

நான்கு நாட்களில் மட்டும் மொத்தமாக 704 கோடி வரை மது விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 164 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

  • Share this:
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கையடுத்து, டாஸ்மாக் மதுக்கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையொட்டி முழு ஊரடங்கிற்கு முந்தைய நாள் சனிக்கிழமை அன்று டாஸ்மாக் மதுக்கடையில் கூட்டம் அலைமோதியது.

அதன்படி முதல் முழு ஊரடங்கு அன்று 171 கோடிக்கும், இராண்டாவது முழு ஊரடங்கு அன்று 173 கோடிக்கும், மூன்றாவது முழு ஊரடங்கு நாளன்று 183 கோடிக்கும், நான்காவது முழு ஊரடங்கு நாளான நேற்று 177 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.

Also read: உலகளவில் 7 லட்சத்தை நெருங்கியது கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

இந்த நான்கு நாட்களில் மட்டும் மொத்தமாக 704 கோடி வரை மது விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் நான்கு நாட்களில் 164 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.
Published by:Rizwan
First published: