சாத்தான் குளம் அருகே 7 வயது சிறுமி கொலை - 2 இளைஞர்கள் கைது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே 7 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

கோப்புப் படம்
- News18
- Last Updated: July 15, 2020, 8:53 PM IST
சாத்தான்குளம் அருகே உள்ள வடலிவிளை காட்டுப்பகுதியில் இறந்த நிலையில் சிறுமியின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையை அடுத்து, சடலமாக மீட்கப்பட்டது வடலிவிளை இந்திரா நகரைச் சேர்ந்த 7 வயது சிறுமி என்பது தெரியவந்தது. இந்த சிறுமியை பக்கத்து வீட்டில் உள்ள இளைஞர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக வடலிவிளையை சேர்ந்த 19 வயதான முத்துஈஸ்வரன் மற்றும் 18 வயதான நந்திஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
படிக்க: கூகுள் + ஜியோ கூட்டுத்தயாரிப்பில் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்கள்
படிக்க: கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் சென்னை - குணமடைவோர் விகிதம் உயர்வு
மேலும், சிறுமி டிவி பார்க்க வந்தத போது, அவரை தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்காததால் அவர் கல்லை விட்டு எரிந்ததாகவும், ஆத்திரத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்ததில் உயிரிழந்ததாகவும் இளைஞர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.