தேசியக்கொடியை இந்திய வரைபடம் வடிவில் உருவாக்கி 7வயது சிறுமி சாதனை

சிறுமி கிறிஸ்டா ஜெசிகா

சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மூவர்ணங்களால் தேசிய கொடியை இந்திய வரைபடம் வடிவில் ரூபிக் கியூப் மூலம் உருவாக்கியுள்ளார்.

 • Share this:
  சுதந்திர தினத்தை முன்னிட்டு கொளத்தூரை சேர்ந்த 7 வயது சிறுமி 955 ரூபிக் கியூப் மூலம், மூவர்ணத்தினால் ஆன தேசிய கொடியை  இந்திய வரைபடம் வடிவில்  8 மணி நேரத்தில் உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

  கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர்களான சாமுவேல்- ஜூலி தம்பதியினரின் மகள் கிறிஸ்டா ஜெசிகா.7 வயதாகும் இவர் அண்ணாநகரில் உள்ள ஆச்சி குளோபல் பள்ளியில் 3 ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயதில் இருந்தே நல்ல அறிவுத் திறனுடன் இருந்து வந்த கிறிஸ்டா ஜெசிகா கடந்த 2019- ஆண்டு பாடியில் உள்ள தமிழ்நாடு கியூப் அசோசியேசனில் சேர்த்து, ரூபிக் கியூப் என்ற அறிவு சார்ந்த விளையாட்டை கற்றுக்கொள்ள அவருடைய பெற்றோர் வழிவகை செய்தனர்.

  கடந்த 2 வருடங்களாக தொடர்ந்து பயிற்சி பெற்று வரும் அந்த சிறுமி, தனது புத்திக்கூர்மையால் ரூபிக் க்யூப் களை வைத்து சாதனை செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில், சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் மூவர்ணங்களால் தேசிய கொடியை இந்திய வரைபடம் வடிவில் ரூபிக் கியூப் மூலம் உருவாக்கி தனது சாதனை படைத்துள்ளார் இந்த சிறுமி. பாடியில் உள்ள தமிழ்நாடு கியூப் அசோசியேசனில்  நடைபெற்ற சாதனை நிகழ்ச்சியில்  காலை 8 மணியளவில் கலந்து கொண்ட சிறுமி கிறிஸ்டா ஜெசிகா, ரூபிக் கியுப்களை வைத்து தனது சாதனையை தொடங்கினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  955 ரூபிக் கியூப் மூலம் 8 மணி நேரம் தொடர்ந்து முயன்று, 6.5 அடி உயரமும், 5.5 அடி அகலமும் கொண்ட, மூவர்ணங்களால் ஆன இந்திய வரைபடத்தை உருவாக்கி சாதனை படைத்தார். இதுகுறித்து சிறுமி கிறிஸ்டா ஜெசிகா கூறும்போது, எனது பெற்றோரும், ரூபிக் க்யூப் பயிற்சியாளரும் இந்த சாதனைக்கு முழு காரணமாக இருந்து வருகின்றனர். இந்தியா எனது தாய்நாடு. இதனால் இந்திய வரைபடத்தை ரூபிக் க்யூப் மூலம் உருவாக்கி இருக்கின்றேன். இது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுக்கிறது என்று கூறினார்.

  செய்தியாளர்: கன்னியப்பன்  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: