தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் வரும் 15ம் தேதி வரை ரத்து

ரயில் (கோப்புப்படம்)

தமிழகத்தில் வரும் 15ம் தேதி வரை 7 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 • Share this:
  கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் வரும் 31ம் தேதி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சிறப்பு ரயில்களை இயக்குவதை தற்காலிகமாக நிறுத்த வேண்டுமென தமிழக அரசு கோரியிருந்தது. இதை ஏற்ற தெற்கு ரயில்வே தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்களை வரும் 15ம் தேதி வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.  அதன்படி திருச்சி - செங்கல்பட்டு மற்றும் மதுரை - விழுப்புரம் இடையேயான அதிகவேக இன்டர்சிட்டி ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கோவையில் இருந்து காட்பாடிக்கு செல்லும் இன்டர்சிட்டி ரயில் மற்றும் அரக்கோணத்தில் இருந்து கோவைக்கு செல்லும் அதிகவேக இன்டர்சிட்டி ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  Also read: அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ எல்லை மீறி பேசியுள்ளனர் - ஹெச்.ராஜா காட்டம்

  கோவையிலிருந்து மயிலாடுதுறைக்‍கு செல்லும் ஜனசதாப்தி சிறப்பு ரயிலும் திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் அதிவேக இன்டர்சிட்டி சிறப்பு ரயிலும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  Published by:Rizwan
  First published: