Home /News /tamil-nadu /

ஒரே ஆண்டில் 7 லாக்அப் மரணங்கள்... தமிழகத்தில் அரசு இயங்குகிறதா? அண்ணாமலை சரமாரி கேள்வி!

ஒரே ஆண்டில் 7 லாக்அப் மரணங்கள்... தமிழகத்தில் அரசு இயங்குகிறதா? அண்ணாமலை சரமாரி கேள்வி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

lockup death | காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை என்று அவர் சாடியுள்ளார்.

    ஒரே ஆண்டில் ஏழு லாக்அப் மரணங்கள்... தமிழகத்தில் அரசு இயங்குகிறதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    அண்மை காலமாக விசாரணை கைதி மரணம் என்பது தமிழ்நாட்டில் தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. சமீபத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியையும், பேசு பொருளாகவும் மாறியது. அந்த சுவடு அழிவதற்கு முன்பே மீண்டும் ஒருவர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில், உடல் நிலை பாதித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

    திருவள்ளூர் மாவட்டம் அலமாதியை சேர்ந்தவர் அப்பு (எ) ராஜசேகர்(30) இவரை கொடுங்கையூர் போலீசார் வழக்கு ஒன்றுக்காக நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென ராஜசேகருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொடுங்கையூர் போலீசார் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு ராஜசேகரின் உடல் நிலை மோசமடைந்ததால் தனியார் மருத்துவமனை நிர்வாகம், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்துள்ளனர்.

    Also Read : ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் ரவியாக செயல்படுகிறார் - திருமாவளவன் காட்டம்

    இதனையடுத்து போலீசார் உடனடியாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு ராஜசேகரை கொண்டு சென்றுள்ளனர். பரிசோதனை செய்த ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவர்கள் வரும் வழியிலேயே ராஜசேகர் உயிரிழிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

    மரணமடைந்த ராஜசேகர் மீது சோழவரம், வியாசர்பாடி, எம்கேபி நகர், மணலி உள்ளிட்ட காவல் நிலையங்களில் மொத்தம் 23 வழக்குகள் உள்ளது. ராஜசேகர் சோழவரம் காவல் நிலையத்தில் பி கேட்டகிரி சரித்திர பதிவேடு குற்றவாளி என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதி மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரப்படுகிறது. மேலும்,வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.



    இந்நிலையில், ஒரே ஆண்டில் ஏழு லாக்அப் மரணங்கள்... தமிழகத்தில் அரசு இயங்குகிறதா? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக அண்ணாமலை தனது ட்விட்டர் பதிவில் கூறியதாவது, இரண்டு நாட்களில், இரண்டு லாக்கப் மரணங்கள். நேற்று ராஜசேகர், இன்று சிவசுப்பிரமணியன். காவல் நிலையத்திற்குச் சென்றால் உயிருடன் திரும்புவோமா என்ற அச்சத்தை விதைத்துள்ளது முதல் அமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை.

    கடந்த ஓராண்டில் ஏழு லாக்கப் மரணங்கள். காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்கு அமைக்கப்பட்ட ஆணையத்தின் நிலை என்ன? தமிழகத்தில் அரசு இயங்குகிறதா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Annamalai, Lockup death

    அடுத்த செய்தி