கோர விபத்து..! திமுக எம்.எல்.ஏ மகன் உட்பட 7 பேர் பலி

சாலை தடுப்பில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கட்டடத்தின் மீது மோதியுள்ளது.

 • Share this:
  ஓசூர் திமுக சட்டமன்ற உறுப்பினரின் மகன் சென்ற ஆடி கார் விபத்தில் சிக்கியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

  கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஓசூர் எம்எல்ஏவுமான பிரகாஷ் அவர்களின் மகன் கருணா சாகர்(24). இவருடன் ஆடி காரில்  6 பேர் பயணித்துள்ளனர். கர்நாடக மாநிலம் கோரமங்களா பகுதியில் ஏற்ப்பட்ட கோர சாலை விபத்தில் எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

  சாலை தடுப்பில் மோதிய கார் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கட்டடத்தின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணித்த மூன்று பெண்கள் உள்பட,7  பேரும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாக  கர்நாடாக மாநிலம் ஆடுகோடி போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.

  இந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் பெங்களூர் செய்ன்ட் ஜான்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து காரணமாக காரை அதிவேகமாக இயக்கியது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: