தஞ்சாவூரில் மொத்த நகை வியாபாரியிடம் இருந்து நூதன முறையில் சுமார் 7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததாக புகார் எழுந்துள்ள நிலையில், கொள்ளை சம்பவம் உண்மை தானா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையை சேர்ந்தவர் மணி (52). மொத்த நகை வியாபாரி. இவர் சென்னையிலிருந்து தஞ்சையில் உள்ள நகைக்கடைகளுக்கு நகைளை கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் இவர் சென்னையிலிருந்து தஞ்சைக்கு வந்து நகை கடைகளுக்கு நகைகளை கொடுத்துள்ளார்.
பின்னர் இரவு டிபன் சாப்பிடுவதற்காக தஞ்சை பழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்றதாகவும். அங்கு நகைகள் அடங்கிய பையை கீழே வைத்து விட்டு சாப்பிட்ட டிபனுக்கு பணம் எடுத்து கொடுத்த போது, அவரை சுற்றி ஒரே நிறத்தில் சீருடை அணிந்த 9 பேர் வந்து நின்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பணத்தை கொடுத்துவிட்டு தனது பையை எடுக்க பார்த்த போது, கீழே வைத்திருந்த நகைப்பையை காணவில்லை என்றும், மேலும் அவரை சுற்றி ஒரே நிறத்தில் சீருடை அணிந்து நின்றிருந்தவர்களையும் காணவில்லை எனவும் அதனைத் தொடர்ந்து, மணி உணவகத்தில் தனது நகைப்பையை தேடி பார்த்தபோது பை கிடைக்கவில்லை என்றும் அந்த பையில் சுமார் 7 கிலோ நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து தஞ்சை மேற்கு போலீசில் மணி புகார் செய்தார். இதன் பேரில் மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சீருடை அணிந்து நின்றிருந்தவர்கள் நூதன முறையில் மணியிடம் இருந்து நகைப்பையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Must Read : புதுக்கோட்டையில் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு... அங்கன்வாடி உணவு காரணமா? - அமைச்சர் ரகுபதி நேரில் ஆய்வு
மேலும் இந்த சம்பவம் உண்மைதானா என்பது குறித்தும் விசாரணை செய்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.