Home /News /tamil-nadu /

Chennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

Chennai Power shutdown: சென்னையில் நாளை 7 மணி நேரம் மின்தடை ஏற்படும் பகுதிகள்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    சென்னையில் நாளை (11.10.2018) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சில இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை (7 மணி நேரம்) கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது’’ என்று தெரிவித்துள்ளது.

    கிழக்கு தாம்பரம் பகுதி: வேளச்சேரி மெயின் ரோடு, பாரத் மாதா தெரு, அகஸ்தியர் தெரு, பாரதியார் தெரு, கம்பர் தெரு, நாவலர்  தெரு, ஆஞ்சநேயர் கோயில் தெரு, அண்ணாதுரை தெரு, அந்தோணி பிள்ளை தெரு, அம்பேத்கர் தெரு, திலகர் தெரு, ஆல்பர்ட் பொன்னுசாமி தெரு, லால்பகதூர் சாஸ்திரி தெரு, காலமேகம் தெரு, விநாயகபுரம், போகர் தெரு.

    பெருங்களத்தூர் பகுதி: மூவேந்தர் நகர், வீரலஷ்மி நகர், மூடிச்சூர் ரோடு.

    கொரட்டூர் பகுதி: ஆர்.எஸ்.ரோடு, செட்டி தெரு, போரியம்மன் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, மாரியம்மன் கோயில் தெரு, பிராமின் தெரு, சாஸ்திரி ஸ்கொயர், பிள்ளையார் கோயில் தெரு, மாணிக்கம் பிள்ளை தெரு, மேனாம்பேடு ரோடு, வன்னியர் தெரு, திருமுல்லைவாயில் தெரு, காமராஜர் நகர், நேரு நகர், தில்லை நகர் விரிவு, முகப்பேர் ரோடு, ஆதிமூலம் அவென்யூ, கிரீச் வீச் காலனி, எம்.டி.எச். ரோடு, நேரு தெரு, சிங்காரம் பிள்ளை தெரு.

    புழல் பகுதி: ஜி.என்.டி.ரோடு, திருநீலகண்டர் நகர், செக்போஸ்ட், புது நகர், ஆரூண் உல்லாச நகர், கண்ணப்பசாமி நகர், சாமியார் மடம், வடகரை ரோடு.

    செங்குன்றம் பகுதி: அழிஞ்சிவாக்கம், விளாங்காடுபாக்கம், கன்னம்பாளையம், சென்றம்பாக்கம், தீயம்பாக்கம், கொசப்பூர், வடகரையின் ஒரு பகுதி.
    Published by:DS Gopinath
    First published:

    Tags: Chennai, Power cut, TANGEDCO, TNEB

    அடுத்த செய்தி