Home /News /tamil-nadu /

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.. எங்கே? எப்போது?

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு.. எங்கே? எப்போது?

கோப்பு படம்

கோப்பு படம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

    கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையல் தகவல் வெளியிட்டுள்ளது.

    இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில், “தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழைபெய்த விவரம் (சென்டிமீட்டரில்)

    பரமக்குடி (ராமநாதபுரம்)11, கீழ் கோதையாறு (கன்னியாகுமரி)9, கடம்பூர் (தூத்துக்குடி), கயத்தாறு (தூத்துக்குடி) தலா 6, தேவலா (நீலகிரி), சத்தியமங்கலம் (ஈரோடு) தலா 5, மதுக்கூர் (தஞ்சாவூர்), கமுதி (ராமநாதபுரம்), வால்பாறை (கோவை), திருவாரூர் (திருவாரூர்), கழுகுமலை (தூத்துக்குடி), ஆழியாறு (கோவை) தலா 4 .

    மீனவர்களுக்கான எச்சரிக்கை :

    செப்டம்பர் 06, தென் கிழக்கு   அரபிக் கடல் ,  மத்திய கிழக்கு,, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி  காற்று 50-60  கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்செப்டம்பர் 06, 07 குமரிக்கடல், மன்னார் வளைகுடா  பகுதிகளில் சூறாவளி  காற்று 40-50  கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்.

    செப்டம்பர் 06 முதல்  செப்டம்பர் 08 வரை கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகள் சூறாவளி  காற்று 45-55  கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்செப்டம்பர் 07,08 தென் கிழக்கு   அரபிக் கடல் ,  மத்திய கிழக்கு,, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி  காற்று 45-55  கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்.



    செப்டம்பர் 06  முதல்  செப்டம்பர் 10 வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55  கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்.  செப்டம்பர் 10 மன்னார் வளைகுடா  பகுதிகளில் சூறாவளி  காற்று 40-50  கிலோமீட்டர்   வேகத்தில் வீசக்கூடும்

    இதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்“ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

     
    Published by:Vijay R
    First published:

    Tags: Weather Update

    அடுத்த செய்தி