ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு 7 நாட்கள் கட்டாயத் தனிமை - அமைச்சர் அறிவிப்பு

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு 7 நாட்கள் கட்டாயத் தனிமை - அமைச்சர் அறிவிப்பு

விமான நிலையம்

விமான நிலையம்

வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளும், நாளை முதல் ஏழு நாட்களுக்கு, கட்டாயம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அரசு உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதான் தமிழகத்தின் முதல் ஒமைக்ரான் பாதிப்பாக இருந்தது. இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், பயணித்தவர்களை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 33 பேரில் 26 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேர் மற்றும் சேலத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் , சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் உள்ள படுக்கை வசதி குறித்து, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன், அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவரையும் தனிமைப்படுத்தி பரிசோதனை மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டதாக தெரிவித்தார். ஆனால், உரிய வழிகாட்டு விதிமுறைகள் ஏதும் இதுவரை கிடைக்காத நிலையில், நாளை முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும், 7 நாட்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறினார்.

Also Read : ஒமைக்ரானுக்கு மத்தியில் தமிழக சுகதாரத் துறையினருக்கு புதிய சவால்

மேலும், தமிழகத்தில் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 34 பேரில், இதுவரை 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அத்துடன், ஒமைக்ரான் பரவலை கருத்தில் கொண்டு, பெரிய நட்சத்திர விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

First published:

Tags: Omicron