கேரள மாநிலம் கும்பநாடு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் - டீனா தம்பதிக்கு, அடூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் பெண் குழந்தை பிறந்தது.
பிறந்து 7 நாட்களே ஆன அந்த குழந்தை அடிக்கடி அழுது கொண்டிருந்தால், அதை சோதித்த மருத்துவர்கள் முதுகு தண்டுவட நோய் இருப்பதை கண்டறிந்தனர்.
அதை கேரளாவில் சரி செய்ய முடியாது என கைவிரித்த மருத்துவர்கள், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அதற்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், அங்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரைத்தனர்.
Also read... வீட்டில் புத்தகங்கள் வைக்கக் கூட இடமில்லை - பள்ளியிலேயே முதலிடம் பிடித்த இரட்டையர்கள்
இதையடுத்து, குழந்தையை தமிழகத்திற்கு கொண்டு வர இபாஸ் பெற விண்ணப்பித்தபோது, அது கிடைக்காததால், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியை அணுகியுள்ளார். அவர் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேசி, முறையாக இபாஸ் கிடைக்க உதவியுள்ளார்.
இதையடுத்து, அடூரில் இருந்து இரவு 10 மணிக்கு குழந்தையுடன் புறப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை சூரத் மேத்யூ என்பவர் ஓட்டி வந்தார். ஆம்புலன்ஸ் வாகனம் வருவதை அடுத்து, பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் வழி ஏற்படுத்தப்பட்டு, பிற வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.
இதனால், வெறும் 10 மணி நேரத்தில், அதாவது காலை 8 மணிக்கு வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்தடைந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் குழந்தை சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சூரத் மேத்யூ ஆகியோருக்கு குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.