ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

11 அடுக்கு உறை கிணறு: 6-ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் கண்டுபிடிப்பு

11 அடுக்கு உறை கிணறு: 6-ம் கட்ட அகழாய்வில் அகரத்தில் கண்டுபிடிப்பு

அகரத்தில் 11 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு

அகரத்தில் 11 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிப்பு

அகரத்தில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வில் 11 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடந்து வருகின்றன. அதில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் கடந்த 7ம் தேதி அகரத்தில் நடைபெற்ற பணியின்போது 5 அடுக்கு உறை கிணறு கண்டுபிடிக்கபட்டிருந்தது. இதன் ஒரு உறை என்பது முக்கால் அடி உயரமும், இரண்டு அறை அடி அகலமும் கொண்டுள்ளது.

Also read: உயிரிழந்த தன் காளையின் நினைவாய் முழு உருவச்சிலை வைத்த விவசாயி

மொத்தம் 5 உறைகள் கொண்ட கிணறு கண்டுபிடிக்கபட்ட நிலையில், இன்று மேலும் 6 உறைகள் சேர்த்து 11 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பண்டைய தமிழர்கள் தண்ணீரை அதிக அளவில் சேமிக்க உறை கிணற்றை பயன்படுத்தியிருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் கருதுகின்றனர்.

First published:

Tags: Excavation, Keezhadi