HOME»NEWS»TAMIL-NADU»6th class student commits suicide by hanging himself near vilathikulam for cellphone vai

விளாத்திகுளம் அருகே செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தில் தாய் செல்போன் தர வில்லை என்பதால் பாலகுரு என்ற சிறுவன் தூக்கிடடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விளாத்திகுளம் அருகே செல்போன் தராததால் 6-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
தற்கொலை செய்துகொண்ட சிறுவன்
  • Share this:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சீனிமுருகன், இவர் கூலி வேலை செய்து வருகிறார், இவருடைய மனைவி ஜோதிமணி. இவர்களுக்கு மதன் (16), பாலகுரு (13) இரு மகன்கள் உள்ளனர். தூத்துக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் படித்து வந்துள்ளனர். பாலகுரு 6ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். வழக்கமாக மதன் மற்றும் பாலகுரு இருவரும் தங்களது பெற்றோர்களின் செல்போன்களை கொண்டு விளையாடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. மேலும் மதன் மற்றும் பாலகுரு இருவரும் செல்போனுக்கு சண்டை செய்து வருவதும் வழக்கம் என்று தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலையில் 9ஆம் வகுப்பு படிக்கும் மதன் பள்ளிக்கு சென்று விட்டார். சீனிமுருகன் வேலைக்கு சென்று விட்டார். ஜோதிமணி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெறும் உறவினர் வீட்டு திருமணத்திற்கு கிளம்பியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக பள்ளி விடுமுறை என்பதால் பாலகுரு வீட்டில் இருந்துள்ளார். தாய் கிளம்பியதும் தானும் திருமண நிகழ்ச்சிக்கு வருவதாக பாலகுரு கூறியுள்ளார். ஆனால் ஜோதி மணி வீட்டிலேயே இருக்கும் படி கூறியுள்ளார்.

அதற்கு மாணவன் பாலகுரு வீட்டில் இருக்க வேண்டும் என்றால்  செல்போனை தரும்படி கேட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஜோதிமணி, சாப்பிட்டு விட்டு வீட்டில் இருக்கும் படியும், வெளியில் சென்று விளையாடக்கூடாது என்றும் கூறி விட்டுச்சென்றுள்ளார். திருமண நிகழ்ச்சி முடிந்து ஜோதிமணி வீட்டிற்கு வந்து பார்த்தபோது பாலகுரு தூக்கில் தொங்கிய படி உயிரிழந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.



ஜோதிமணியின் அழுகுரலை கேட்ட அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, விளாத்திகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தியதில் தனது தாய் செல்போன் தரவில்லை, தன்னையும் அழைத்து போகவில்லை என்ற காரணத்தினால் பாலகுரு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க... இடைக்கால பட்ஜெட்: துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்

தாய் செல்போன் தரவில்லை என்பதற்காக சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

-----------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

 மாநில உதவிமையம்: 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Vaijayanthi S
First published: