புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோபாலப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் ஜாபர்சாதிக், இவர் புருனை நாட்டில்
சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 27ம் தேதி இவரது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து மர்ம நபர்கள் 750 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதனையடுத்து அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து மீமிசல் காவல் துறையினருக்கும் ,வீட்டின் உரிமையாளர் ஜாபர்சாதிக்கும் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலின் அடிப்படையில் மீமிசல் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் தீரன் என்ற மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்க்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் நேரில் ஆய்வு மேற்க்கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்தீபன் உத்தரவின் பெயரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள், அப்பகுதியைச் சேர்ந்த நபர்கள் மற்றும் பழைய குற்றவாளிகள் ஆகியோரிடம் விசாரணை மேற்க்கொண்டு வந்தனர்.
Also Read : புதுக்கோட்டையில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் தலையிலிருந்து குண்டு அகற்றம்
இந்நிலையில் இன்று காலை உறவினர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் கொள்ளை போன வீட்டின் பின்பக்கத்தில் உள்ள கிணற்றில் காவல்த்துறையினர் ஆய்வு மேற்க்கொண்டனர். அப்போது கிணற்றின் மேற்ப்புறத்தில் மூடப்பட்டிருந்த கம்பிக் கதவு லேசாக திறந்திருப்பதைக் கண்டு சந்தேகமடைந்த காவல்த்துறையினர், கிணற்றிலிருந்த தண்ணீரை வெளியேற்றிப் பார்த்துள்ளனர். அப்போது காணாமல் போன நகை மூட்டையாக கட்டி உள்ளே கிடந்தது தெரிய வந்துள்ளது.
கிணற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த திருட்டு நகைகள்.. மர்ம நபர்கள் சிக்குவார்களா?#Pudukkottai | #GoldTheft | #CrimeTime pic.twitter.com/S3s2Mmb0X6
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 30, 2021
அதனையடுத்து சம்பவ இடத்திற்க்கு விரைந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தினேஷ்குமார், நகை மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் நகையை எடை போட்டதில் 559 சவரன் நகை இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்க்கனவே 750 சவரன் கொள்ளை போனதாக காவல்த்துறைக்கு புகார் அளித்துள்ள நிலையில் தற்ப்போது 55 9சவரன் நகை மட்டுமே கிடைக்கப்பட்டுள்ளது. எனவே கிடைக்கப்பட்ட நகையை கைப்பற்றிய காவல்த்துறையினர் கானாமல் போன நகை எவ்வாறு கிணற்றுக்குள் வந்தது, மீதி நகை எங்குள்ளது என்ற பல்வேறு கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.