• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சேலம் தனியார் ஆலையில் பிடிபட்ட 67 பாம்புகள்

சேலம் தனியார் ஆலையில் பிடிபட்ட 67 பாம்புகள்

பிடிபட்ட பாம்புகள்

பிடிபட்ட பாம்புகள்

சேலம் மாவட்டம் மேட்டூரிலுள்ள தனியார் தேனிரும்பு உருக்காலை வளாகத்தில் உலாவிய 14 கடும் விஷ பாம்புகள் உட்பட  67 பாம்புகளை இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினர்  பிடித்து வனத்துறை உதவியுடன் வட பர்கூர் காட்டுப் பகுதியில் விட்டனர்.

  • Share this:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த பொட்டனேரியில் 800 ஏக்கர் பரப்பில் தனியார் தேனிரும்பு உருக்காலை உள்ளது. இதில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 5,000 -க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இங்கு உலாவி வரும் பாம்புகளால் ஆலை வளாகம் மட்டுமின்றி சுற்று வட்டாரத்தில் வசிக்கும் மக்கள்  பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுதொடர்பாக மக்கள் கொடுத்த புகாரையடுத்து அந்நிர்வாகம் காஞ்சிபுரம் மாவட்டம் பேரூரில் உள்ள இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினரைக் கொண்டு கடந்த 20 -ம் தேதி முதல் இன்று வரை 7 நாட்கள் பாம்புகளை  உயிருடன் பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் நல்ல பாம்பு 4, கண்ணாடி விரியன் 10 ஆகிய விஷப் பாம்புகளுடன் உட்பட பச்சைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, உல்ப் சினேக், ரசுல் குக்ரி 67 பாம்புகளை உயிருடன் பிடித்தவர்கள், அவைகளை மேட்டூர் வனத்துறை அலுவலர் பிரகாஷ் முன்னிலையில் கொளத்தூர் அருகே  வட பர்கூர் காப்புக் காட்டில் விட்டனர்.



இதில் அரிய வகை பாம்பான ரசுல் குக்ரி ஒரு அடி நீளம் மட்டுமே வளரும் தன்மைக் கொண்டது .மேலும் இதேபோல் இந்த தனியார் தொழிற்சாலையில் 52 பாம்புகள் பிடித்து வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினர் தெரிவிக்கையில் பாம்பு பிடித்தல் மட்டுமல்லாது பாம்பின் விஷத்தை எடுத்து மருந்துகள் தயாரிக்க அனுப்புவதாகவும் தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: