• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சம் நபர்கள் காத்திருப்பு!

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சம் நபர்கள் காத்திருப்பு!

பட்டதாரி ஆசிரியர்கள் 85 ஆயிரத்து 310 நபர்களும்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 711 நபர்களும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Share this:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 நபர்கள் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மாவட்ட மற்றும் மாநில வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வெளியிட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 பேர் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read:  Job Alert: BE/B.Tech தேர்ச்சி போதும்.. பல்வேறு காலிப்பணியிடங்கள்-ஆதார் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அவர்களில் 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் 24 லட்சத்து 88 ஆயிரத்து 254 நபர்கள் என்றும், 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் 12 லட்சத்து 26 ஆயிரத்து 417 நபர்களும், 58 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10907 நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also read: Job Alert: ரூ.1,87,700 சம்பளம்.. தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

அதேபோல் மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 1,36,515 நபர்கள் பதிவு செய்து காத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பட்டதாரி ஆசிரியர்கள் 85 ஆயிரத்து 310 நபர்களும்,  முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 42 ஆயிரத்து 711 நபர்களும் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Esakki Raja
First published: