கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 660 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதுடன் 5 பேர் கைது செய்துள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கண்டெய்னரில் போலியான தனியார் நிறுவன பெயரில் கஞ்சா கடத்தி வருவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அந்த பகுதியில் அதிகாரிகள் சோதனை செய்த போது, ஆந்திரவில் இருந்து வந்த கண்டெய்னரை அதிகாரிகள் சோதனை செய்த போது, அதில் மறைத்து வைத்திருந்த சுமார் 310 பாக்கெட்டுகளில் 661.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த கண்டெய்னரில் கஞ்சாவை கடத்தி வந்த வந்த திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ரமணன்(33), தவமணி(34) மற்றும் நாகபட்டினத்தை சேர்ந்த செல்வராஜ்(54), ஐயப்பன்(35) , பரமானந்தம் (43) ஆகியோரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பின்னர் இவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சாவை ஆந்தராவிலிருந்து லாரி மூலமாக நாகப்பட்டினத்திற்கு கொண்டு வந்து பின்னர் நாகப்பட்டிணத்திலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு கடத்தி செல்ல திட்டமிட்டது தெரியவந்தது.
Also see...
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.