யோகா கற்கச்சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த, 64 வயது யோகா மாஸ்டர் போக்சோவில் கைது..

யோகா கற்கச்சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த, 64 வயது யோகா மாஸ்டர் போக்சோவில் கைது..

மாதிரி படம்

மதுரையில் பிரபல மடத்தில் யோகா பயிற்சிக்கு சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யோகா மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  மதுரை, திருமங்கலத்தில் பிரபல மடத்தில் யோகா பயிற்சி கற்றுக்கொள்ள சென்ற 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக யோகா மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமங்கலம் மதுரை சாலையில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவன மடம் உள்ளது. இந்த தபோவனத்தின் ஒரு பகுதியை குருநாதன் என்பவர் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

  இதில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இங்கு யோகா மாஸ்டராக பணிபுரிந்து வந்தவர் திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த 64 வயதான குருநாதன். பள்ளி விடுமுறையால் அதிகளவில் மாணவ மாணவிகள் ராமகிருஷ்ணா தபோவன மடத்தில் யோகா கற்று வருகின்றனர்.  திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரும் கடந்த இரண்டு வாரங்களாக யோகா பயிற்சி கற்றுக் கொண்டு வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை யோகா பயிற்சி முடித்து சிறுமி வீட்டுக்கு புறப்பட்டபோது யோகா மாஸ்டர் குருநாதன் சிறுமியை அவரது அலுவலக அறைக்குள் அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

  இச்சம்பவம் குறித்து சிறுமி அவருடைய தாயிடம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் தாய் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் யோகா மாஸ்டர் குருநாதன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யோகா கற்றுக்கொள்ள சென்ற சிறுமிக்கு, மாஸ்டரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் மதுரை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Rizwan
  First published: