ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 64 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு 64 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 1 ஆம் தேதி முதல் தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐய்யப்பன் ஆலயத்திற்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின் போது, தமிழகத்திலிருந்து ஐய்யப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி இந்த வருடம் கேரளாவிற்கு இயக்குவதற்கு 64 சிறப்புப் பேருந்துகளுக்கு உரிமம் பெறப்பட்டுள்ளது.

    அந்த வகையில், இந்த ஆண்டு நாளை முதல் 16 ஆம் தேதி வரையில்,  சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களிலிருந்து பம்பைக்கு, அதி நவீன சொகுசு மிதவைப் பேருந்துகள் சிறப்புப் பேருந்துகளாக இயக்கப்படவுள்ளன.

    மேலும் பக்தர்களின் வசதிக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும்,  30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்புப் பேருந்துகளுக்கு www.tnstc.in, உள்ளிட்ட தனியார் பேருந்து முன்பதிவு செயலிகள் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும், பேருந்துகளின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு, 9445014412, 9445014450, 9445014424, 9445014463, மற்றும் 9445014416 ஆகிய கைப்பேசி எண்களைத் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் தமிழ்நாடு அசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

    Also read: சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்... தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு

    Published by:Esakki Raja
    First published:

    Tags: Sabarimala Ayyappan, Sabarimalai Ayyappan temple