முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நோய் ஏற்படுத்தும் பிரதான வைரஸாக வேகம் எடுக்கும் ஒமைக்ரான்...! 

நோய் ஏற்படுத்தும் பிரதான வைரஸாக வேகம் எடுக்கும் ஒமைக்ரான்...! 

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எடுக்கப்படும் அனைத்து மாதிரிகளுக்கும் டேக் பாத் பரிசோதனை கிட் பயன்படுத்தப்படுவதால் புற நோயாளிகள் சிலருக்கும் எஸ் மரபணு மாற்றம் கண்டறியப்பட்டது.

 • 1-MIN READ
 • Last Updated :

  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 64 பேருக்கு ஒமைக்ரான் இருப்பதற்கான அறிகுறியாக எஸ் மரபணு மாற்றம் கண்டறியப்பட்டுள்ளது.

  சென்னையை சேர்ந்த சர்க்கரை நோயாளி ஒருவர் அறுவை சிகிச்சைக்காக வந்த போது அவரிடமிருந்து தொற்று பரவியுள்ளது. அவருக்கு பரிசோதனை செய்ததில் எஸ் மரபணு மாற்றம் கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் என 50க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு எஸ் மரபணு மாற்றம் கண்டறியப்பட்டது.

  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் எடுக்கப்படும் அனைத்து மாதிரிகளுக்கும் டேக் பாத் பரிசோதனை கிட் பயன்படுத்தப்படுவதால் புற நோயாளிகள் சிலருக்கும் எஸ் மரபணு மாற்றம் கண்டறியப்பட்டது.

  Also read... சளி, காய்ச்சல் மட்டுமே இருந்தது... முதல் இரண்டு அலைகளில் பாதிக்கப்படவில்லை - ஒமைக்ரான் தொற்றிலிருந்து மீண்டவர் பேட்டி!

  நேற்று வரை எஸ் மரபணு மாற்றம் கண்டறியப்பட்ட 51 பேரில் ஆறு பேருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் 22 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தனர்.

  Also read... டெல்லியில் அமலானது மஞ்சள் எச்சரிக்கை - பள்ளி, ஜிம், திரையரங்குகள் மூடப்பட்டன!

  தமிழகத்தில இது வரை 45 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  First published: