கும்பகோணத்தில் வாக்கு சாவடி மையத்தில் 62 வயது முதியவர் உயிரிழப்பு...

உயிரிழந்த முதியவர்

கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை ஆற்றங்கரை வடம்பொக்கி தெருவை சேர்ந்த அர்ச்சுனன் வயது 55 என்பவர் இன்று அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் மெட்ரிக் பள்ளியில் வாக்களித்து விட்டு வெளியே வந்த போது மயங்கி விழுந்து இறந்தார்.

  • Share this:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதிக்குட்ப்பட்ட அய்யம்பேட்டையில் தனியார் பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடி மையத்தில் வாக்களிக்க வந்த 62 வயது முதியவர் வரிசையில் நின்று வாக்களித்துவிட்டு திரும்பும் போது மயக்க போட்டு கீழே விழுந்துள்ளார். அருகில் உள்ளவர்கள் அவரை உடனடியாக அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இறந்த முதியவர் அர்ஜுனன் நெசவு கூலித் தொழிலாளி அவருக்கு ஒரு மனைவியும் ஒரு மகள் மகன் உள்ளனர்.

மேலும் படிக்க... அரை நிர்வாணத்துடன் வந்து வாக்கு பதிவு செய்த விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு

அர்ஜுனனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஏற்கனவே நெஞ்சுவலி இருப்பதாகவும் மேலும் லோபிரசர் இருப்பதாகவும் தெரிவித்தனர். இருப்பினும் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் வெயில் கடுமையாக உள்ளது. அதுபோல் இன்றும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதும் ஒரு காரணமென தெரிவிக்கின்றனர்.

தமிழக சட்டசபைத் தேர்தல் இன்று காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பொதுமக்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் மும்மரமாக வாக்களிக்க சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் செய்தியாளர்: குருநாதன்உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: