Home /News /tamil-nadu /

சென்னையில் இன்று ஒரே நாளில் 62 விமானங்கள் ரத்து!

சென்னையில் இன்று ஒரே நாளில் 62 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையம்

இன்று ஒரே நாளில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் மொத்தம் 62 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன

    சென்னையில் இன்று விமான நிலையத்தில் ஒரே நாளில் மட்டும் போதிய பயணிகள் இல்லாமல் 62 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    கொரோனா வைரஸ் பீதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் சென்னை சா்வதேச விமான நிலையம் மற்றும் உள்நாட்டு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. எனவே போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 44 சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    மலேசியா−சென்னை 6, இலங்கை−சென்னை 4 விமானங்கள்,
    குவைத்−சென்னை 3 விமானங்கள், மஸ்கட்−சென்னை 3 விமானங்கள், துபாய்−சென்னை 2 விமானங்கள்,
    தோகா, சிங்கப்பூா், பக்ரைன்,ஜொ்மன், செயிண்ட் டெனிஸ் ஆகிய இடங்களிலிருந்து சென்னை வரும் தலா ஒரு விமானம், மொத்தம் 23 வருகை விமானங்களும், அதைப்போல் சென்னையிலிருந்து வெளி நாடுகளுக்கு புறப்பட்டு செல்லும் 23 விமானங்களும் மொத்தம் 46 சா்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

    அதைப்போல் போதிய பயணிகள் இல்லாமல் சென்னையிலிருந்து பெங்களூா், ஹைதராபாத்,கொச்சி, மும்பை, புனே, தூத்துக்குடி, திருச்சி, கோவா ஆகிய இடங்களுக்கு செல்லும் 8 விமானங்களும், இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் 8 விமானங்களும், மொத்தம் 16 உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இன்று ஒரே நாளில் மட்டும் சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாமல் மொத்தம் 62 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

    Also see...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Airport, Chennai

    அடுத்த செய்தி