ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சென்னையில் பிரபல ஹோட்டலில் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்!

சென்னையில் பிரபல ஹோட்டலில் 60 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்!

சென்னையில் பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்

சென்னையில் பிரபல ஹோட்டலில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல்

அந்த ஹோட்டலில் நடந்த சோதனையில் கோழி, இறால், மீன் உள்ளிட்ட 60 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சென்னை வடபழனி 100 அடி சாலையில் அமைந்துள்ள பிரபல தனியார் உணவகமான "யா மொஹைதீன்" பிரியாணி உணவகத்தில் கெட்டுப்போன சிக்கன் பரிமாறப்பட்டதாக வந்த புகாரையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி  சோதனையை நடத்தினர்.

உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ் உட்பட அதிகாரிகள் "யா மொஹைதீன்" பிரியாணி கடையில் உள்ள சமையல் அறை முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான சிக்கன், மீன், இறால் உள்ளிட்ட இறைச்சிகள் 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது.

சோதனைக்குப்பின் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கெட்டுப்போன கோழிக்கறிகள் பரிமாறப்பட்டதாக உணவு பாதுகாப்புத்துறைக்கு வாட்ஸ் அப் மூலம் வந்த புகாரையடுத்து "யா மொஹைதீன்" உணவகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த சோதனையில் 60 கிலோ கெட்டுப்போன காலாவதியான இறைச்சிகள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பேசிய அவர், சமையல் அறையில் செயல்படாத குளிரூட்டிகளில் இறைச்சிகள் வைக்கப்பட்டிருந்ததாகவும், இறைச்சிகள் வாங்கியதற்கு சரியான ரசீது இல்லை எனவும் தெரிவித்த அவர் இந்த நிறுவனத்தின் பெயரில் அமைந்துள்ள மற்ற கடைகளுக்கும் சோதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முதற்கட்டமாக ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டு 15 நாட்கள் உணவகம் செயல்பட தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் 15 நாட்களுக்கு பிறகு மீண்டும் உணவு பாதுகாப்புத்துறை சார்பாக சோதனை நடைபெறும் எனவும் அப்போது கடையின் தன்மையை பொறுத்து உணவகம் மீண்டும் இயங்க தடையில்லா சான்று வழங்கப்படும் என தெரிவித்தார்.

தடையில்லா சான்று கொடுத்த பின்பு உணவகங்கள் மீண்டும் இதே தவறை செய்தால் உணவகத்திற்கு நிரந்தர சீல் வைக்கப்படும் எனவும் தங்களது சோதனை உணவகங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Briyani, Chennai, Chicken