கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் 11 டிரைவர் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்களுக்கு 6 ஆயிரம் பேர் விண்ணப்பித்த நிலையில் நேர்முகத்தேர்வு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் நான்கு ஓட்டுனர்கள் பதவி மற்றும் நான்கு உதவியாளர்கள் மூன்று இரவு நேர காவலர் பணி களுக்கு இன்று நேர்முகத்தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தப் பணிகளுக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து 6000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதனை ஒட்டி அவர்கள் அனைவரும் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேர்முக தேர்வுக்கு வந்தவர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனையடுத்து போலீசார் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Published by:Vijay R
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.