கொரோனா பொது முடக்கத்தால் ₹ 6,000 கோடி வாழை வர்த்தகம் பாதிப்பு

கோப்புப் படம்

மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் ₹ 200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

  • Share this:
கொரோனா நோய்த் தொற்று பரவலாலும் பொது முடக்கத்தாலும் நாடு முழுக்க ₹ 6,000 கோடி வாழை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் பொது முடக்கம் ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் கேரளாவிற்குச் செல்ல வேண்டிய நேந்திரம் வாழைகள் தேக்கமடைந்தன. இதனால் நேந்திரம் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது. தொடர்ந்து மற்ற பூவன், மொந்தன், ரஸ்தாளி, ஏழலரி, கற்பூரவள்ளி உள்ளிட்ட  வாழைகளும் ஏற்றுமதி தடைபட்டு, விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்தது. விநியோகம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் வாழை வர்த்தகத்தில் ₹ 6,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வாழை ஏற்றுமதி அதிகம் நடைபெறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் ₹ 200 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தேசிய வாழை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கொரோனா தாக்கத்தினால் வர்த்தகம் பாதிப்பு ஒருபுறமிருக்க, அண்மையில் பெய்த மழை, பலமான காற்று ஆகியன திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் வாழை சேதமடைந்துள்ளன. எனவே, வாழை விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹ 1 லட்சம் இழப்பீடு தர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வாழையை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து கொரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை பெறுவோர் உள்ளிட்டோருக்கு வழங்க வேண்டும் என வாழை விவசாயிகள் கேட்டுக்கொண்டனர்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
Also see:
Published by:Rizwan
First published: