• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 3 மணி நேரம் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிய 60 வயது மூதாட்டி...!

3 மணி நேரம் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிய 60 வயது மூதாட்டி...!

மூதாட்டி

மூதாட்டி

ஆரணி அருகே 60 வயது மதிக்கதக்க மூதாட்டி 3 மணி நேரம் வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கி ஆனந்தத்தில் பாட்டு பாடி அசத்தினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    கடந்த 45 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் சில கட்டுபாட்டுகளுடன் இன்று டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. 2 காவலர்கள் 2 ஊர்காவலர் படை, தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அரசு மதுபான கடைகளுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 33 அரசு மதுபானக்கடை இயங்கி வந்தன. தற்போது இதில் 19 அரசு மதுபானகடை இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரணி டவுணைச் சுற்றியுள்ள சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் மதுக்கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதில் காலை முதலே மதுப்பிரியர்கள் மதுகடையை நோக்கி சென்று ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இதில் ஆரணியை அடுத்த மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில் காலை முதலே சுமார் 3 மணி நேரம் காத்திருந்து அதே கிராமத்தை சேர்ந்த மூதாட்டி 4 மதுபாட்டில்களை வாங்கிச்சென்றார்.



    மேலும், மதுபாட்டில் வாங்கிய ஆர்வத்தில் பாட்டும் பாடி அசத்தினார்.

    படிக்க: டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை விபரங்கள் வெளியீடு - முழு பட்டியல்








    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: