செயற்கை சுவாச கருவி உதவியுடன் வாக்குசாவடிக்கு வந்து ஓட்டு போட்ட முதியவர்

செயற்கை சுவாச கருவி உதவியுடன் வாக்குசாவடிக்கு வந்து ஓட்டு போட்ட முதியவர்

செயற்கை சுவாச கருவியுடன் வாக்கு செலுத்திய முதியவர்

மூச்சுதிணறலால் பாதிகப்பட்ட முதியவர் செயற்கை சுவாச கருவி உதவியுடன் வாக்குசாவடி மையத்திற்கு வந்து தன்னுடைய ஜனநாயக கடமையாற்றினார். Actor Vijay cycles to polling booth

  • Share this:
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி 53.35% வாக்குகள்தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் முதல்முறை வாக்காளர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் செயற்கை சுவாச கருவி உதவியுடன் வந்து வாக்களித்துள்ளார்.

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட் நாகராஜ். 60 வயதான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றால் உடல் நலம் பாதிகப்பட்டார். கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்தாலும், மூச்சு திணறலால் பாதிகப்பட்டு மருத்துவமனையில் சிகச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் இன்று வில்லிவாக்கம் பத்மா சாரங்கபாணி பள்ளியில் உள்ள வாக்குசாவடி மையத்தில் செயற்கை சுவாச கருவி உதவியுடன் வந்து, உடல்நிலை பாதிகப்பட்ட நிலையிலும் தன்னுடைய வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை ஆற்றினார்.
Published by:Sheik Hanifah
First published: