வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் 6 பேர் கைது... தலைமறைவான இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

மானாமதுரை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பைக், வாள்கள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வழிப்பறியில் ஈடுபட்ட இளைஞர்கள் 6 பேர் கைது... தலைமறைவான இருவருக்கு போலீஸ் வலைவீச்சு
மானாமதுரை பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பைக், வாள்கள் முதலானவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
  • Share this:
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் சாலைகளில் செல்பவர்களை பைக்கி சென்று தாக்கி வழிப்பறி செய்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் தேடப்பட்டு வருகின்றனர்.

மானாமதுரையில் நேற்று இரவு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் இருந்து மதுரைக்கு காய்கறிகள் வாங்குவதற்காக டாடா ஏஸ் வண்டியில் பாலமுருகன் என்பவர் சென்றுள்ளார். பைக்கில் அதிவேகமாக வந்த நபர்கள் அவரிடம் வண்டியை நிறுத்தக் கூறியுள்ளனர். உடனே அவரும் ஏதோ பிரச்சனை என்று கருதி நிறுத்தியுள்ளார். நிறுத்தியவுடன் 8 இளைஞர்கள் அவரை வாள் மற்றும் பயங்கர ஆயுதங்களுடன் மிரட்டியதுடன் தாக்கவும் செய்துள்ளனர். பிறகு அவரிடமிருந்த செல்போனைப் பறித்துக் கொண்டு அவரது உள்ளங்கையில் வெட்டி விட்டுச் சென்றுள்ளனர்.

இதே மானாமதுரை அருகே செய்களத்துர் பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரைத் தாக்கி அவரிடம் இருந்து பைக்கைப் பறித்துச் சென்றுள்ளனர். இதில் ஈடுபட்டோர்களுள் 6 பேரை மானாமதுரை இன்ஸ்பெக்டர் சேது தலைமையில் சார்ப்பு ஆய்வாளர்கள் மாரிகண்ணன், அர்ஜூனன், சிப்காட் சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ன் ராஜா ஆகியோர் பிடித்துள்ளனர். தப்பியோடிய சதீஷ் என்ற குருவி, சிவா ஆகியோரை மானாமதுரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களிமிருந்து வாள், 4 பைக், செல்போன் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளது.









Also see:
First published: June 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading