• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • ஓசூரில் டெங்கு காய்ச்சலால் 6 வயது சிறுமி உயிரிழப்பு! 30-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்

ஓசூரில் டெங்கு காய்ச்சலால் 6 வயது சிறுமி உயிரிழப்பு! 30-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல்

 டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள்

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ஓசூர் அருகே டெங்கு காய்ச்சலால் 6 வயது சிறுமி உயிரிழந்தார். மேலும், ஒரே கிராமத்தில் 30-க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல் பரவியிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை அடுத்த பெரியபூதக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சரக்கு வாகன ஓட்டுநர் பிரகாஷின் 6 வயது மகள் ஹரிப்பிரியா, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தர்மபுரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு டெங்கு காய்ச்சல் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரிப்பிரியா, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

30-க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிப்பு


இதேபோல, பெரிய பூதக்கோட்டை கிராமத்தில் 30-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தேன்கனிக்கோட்டை மற்றும் தர்மபுரி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க... சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ரூ.1 லட்சம் அபராதம்... ஊரை விட்டு வெளியேற வேண்டும்...! ஊர் மக்கள் மீது புகார்





அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: