வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வைகோ, அன்புமணி உள்ளிட்ட 6 பேரும் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ராஜ்யசபா
  • News18
  • Last Updated: July 11, 2019, 3:18 PM IST
  • Share this:
வைகோ, அன்புமணி, வில்சன், முகம்மது ஜான் உள்ளிட்ட 6 பேரும் தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு திமுகவில் இருந்து வில்சன், சண்முகம், அதிமுகவில் இருந்து முகம்மது ஜான், சந்திரசேகர் உள்ளிட்டோரும், மதிமுகவில் இருந்து வைகோ மற்றும் பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.

எதிர்பார்க்கப்பட்டது போலவே, 6 பேரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதற்கான அறிவிப்பை தேர்தல் அதிகாரி இன்று வெளியிட்டுள்ளார்.


தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இன்று சான்றிதல் வழங்கப்படுகிறது.

First published: July 11, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்