முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இடஒதுக்கீடு குறித்து ராமதாசுக்கு 6 கேள்விகள்: முரசொலியில் வெளியான கடிதம்!

இடஒதுக்கீடு குறித்து ராமதாசுக்கு 6 கேள்விகள்: முரசொலியில் வெளியான கடிதம்!

முரசொலியில் வெளியான படம்

முரசொலியில் வெளியான படம்

இதுவரை 20 % இட ஒதுக்கீடு கேட்ட நீங்கள், இப்போது எதற்காக இறங்கி வந்தீர்கள்? என்பது உள்ளிட்ட கேள்விகள் எழுப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

முரசொலியில் வன்னிய குல இளைஞன் என்ற பெயரில் மருத்துவர் இராமதாசுக்கு கடிதம் எழுதி அதில் 6 கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன.

அதில், ‘வன்னியர்களுக்கு 20 % இட ஒதுக்கீடு என்பதிலிருந்து பின்வாங்க மாட்டேன் என வீர கர்ஜனை புரிந்த நீங்கள், இப்போது உள் ஒதுக்கீடு என்கிறீர்கள் எப்படி அய்யா இப்படி பல்டி அடிக்க உங்களால் முடிகிறது ?

நீங்கள் அரசியல் கட்சி துவங்கியதிலிருந்து உங்கள் வரலாற்றை அரசியல் மாணவன் ஆராய்ந்தால் நீங்கள் அடுத்தடுத்துக் கொடுத்த வாக்குறுதிகளில் தடுக்கி விழுந்து, தடம் புரண்ட நிகழ்வுகளை கண்டு மூர்ச்சித்து விழுந்துவிடுவான்.

விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு என மு.க.ஸ்டாலின் பேசியபோது எத்தனை வக்கணை பேசினீர்கள் நினைவிருக்கிறதா ?

திமுக ஆட்சிக்கு வந்ததும் இப்போது நீங்கள் கேட்கும் உள் ஒதுக்கீடு பரீசிலிக்கப்படும் என மு.க.ஸ்டாலின் சொன்னாரே அதை எண்ணிப்பாராது அதிமுகவு ஆதரவு என்கின்றீர்கள் அய்யா? எனக்கு மட்டுமல்ல வன்னிய இளைஞர்களுக்கு புரியாத சில கேள்விகள் இருக்கின்றன. அதற்கு விளக்கம் அளிப்பீர்களா? என்றும் அத்துடன் 6 கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.

1.  வன்னியர்கள் பயனடையும் வகையில் பல சட்டங்களை இயற்றிய திமுகவை எதிர்க்கின்றீர்கள்; ஆனால் வன்னிய மக்களின் எந்த கோரிக்கையையாவது பல முறை நீங்கள் கூட்டணி சேர்ந்த அதிமுக நிறைவேற்றியிருக்கிறதா? ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாத அதிமுக உங்களுக்கு மட்டும் இனிப்பது ஏன்?

2.  15 % குறைவாக இட ஒதுக்கீட்டை வழங்கினால் உக்கிர போராட்டம் நடத்துவேன் என இதுவரை கூறிய நீங்கள், திடீரென 20% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கினால் போதும் என பின் வாங்கியது ஏன்?

3.  பிற்படுத்தப்பட்டோருக்கான 20 % இட ஒதுக்கீட்டில் எத்தனை சதவீதம் உள் ஒதுக்கீடு கேட்கிறீர்கள் என்பதை தெளிவுபடுத்தாதனேன்?

4.  சீட் ஒதுக்கீடு போன்ற பல பேரங்களுக்கு நீங்கள் ஒரு பெரும் சமூகத்தையே அடகு வைத்து உங்களை வளப்படுத்திக்கொள்ள எங்களை நட்டாற்றில் விடுவது ஏன்?

5.  அன்புமணிக்கு எம்.பி. சீட் தந்ததை தவிர அதிமுக ஆட்சி வன்னிய இன மக்களுக்கு என்ன செய்தது? 21 வன்னிய உயிர்களை பலி வாங்கிய அதிமுக கட்சிக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு வழங்குவது ஏன்? பின்னணியில் பல கோடி விவகாரங்கள் இருப்பதாக கூறுவது உண்மையா?

6.  இதுவரை 20% இட ஒதுக்கீடு கேட்ட நீங்கள், இப்போது எதற்காக இறங்கி வந்தீர்கள்? “பாதாளம் மட்டும் பாயும்” சக்தி வாய்ந்த பல பேரங்கள்தான் காரணம் என பலராலும் பேசப்படுவது உண்மையா? இதற்கெல்லாம் உரிய விளக்கம் வழங்குவீர்களா? என்று அதில் கேள்வி எழுப்பட்டுள்ளது.

First published:

Tags: Murasoli