முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அதிரடி அறிவிப்பு

இன்னசன்ட் திவ்யா

நீலகிரியில் கொரோனா விதிமுறைகளை கண்காணிக்க 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கபட்டுள்ளது.

 • Share this:
  உதகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதங்கள் சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்டும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை என்றால் மீண்டும் 2-வது அலை உருவாகும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

  தமிழகத்தில் கொரோனா பரவலை அதிகரிப்பதை முன்னிட்டு அண்டை மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

  இந்நிலையில் உதகையில் கொரோனா விதிமுறைகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாத சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசனட் திவ்யா அறிவித்துள்ளார். நீலகிரிக்கு அதிக சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் இரண்டாவது அலை வந்தால் கட்டுபடுத்த முடியாது என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

  கொரோனா விதிமுறைகளை கண்காணிக்க 20 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கபட்டுள்ளது. இது வரை 30,68,000 ரூபாய் அபராதம் விதிக்கபட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
  Published by:Vijay R
  First published: