Home /News /tamil-nadu /

சதுரங்க வேட்டை பட பாணியில் விவசாயியிடம் இரிடியம் மோசடி - 6 பேர் கைது

சதுரங்க வேட்டை பட பாணியில் விவசாயியிடம் இரிடியம் மோசடி - 6 பேர் கைது

Youtube Video

ஈரோடு அருகே இரிடியம் தருவதாகக் கூறி 10 லட்ச ரூபாயை பெற்று மோசடி செய்த 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். சதுரங்க வேட்டை பட பாணியில் நடந்த இரிடியம் மோசடியில், குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

சதுரங்க வேட்டை படத்தில் இரிடியம் மோசடி கும்பல் ஏமாற்றி பணம் பறிப்பதுபோல், ஒரு கும்பல் விவசாயியை ஏமாற்றி 10 லட்ச ரூபாய் பறித்துள்ளது. கொள்ளை கும்பலைச் சேர்ந்த 6 பேர் சிக்கியுள்ள நிலையில், கொள்ளை கும்பல் தலைவன் தப்பியுள்ளார்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். விவசாயியான இவரை சில நாட்களுக்கு முன்னர் காந்தி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவர் சந்தித்து, தன்னிடம் இரிடியம் இருப்பதாக கூறியுள்ளார்.

அந்த இரிடியத்தை வீட்டில் வைத்தால் ஐஸ்வரியங்கள் கூடும், பணவரவுகள் அதிகரிக்கும் எனஆசை வார்த்தை கூறி உள்ளார்.

இரிடியத்தை கொடுக்க 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். பல்வேறு பிரச்னையில் இருந்த ராமலிங்கம், இரிடியத்தை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு கடந்த 5ஆம் தேதி பணத்துடன் வருமாறு சதீஷ் குமார் கூறியுள்ளார்.

ராமலிங்கம் தனது நண்பர் தங்கவேல் முன்னிலையில் சதீஷ்குமாரிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். அரை மணி நேரத்தில் இரிடியத்தை தருவதாகக்கூறி சென்றவர் திரும்பி வரவில்லை.

இதை அடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த, ராமலிங்கம், அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சதீஷ்குமார் அவரது நண்பர்களான செந்தில்ராஜ், சேட்டு, காசிநாதன் துரை, மதன், சுரேஷ், பிரசாந்த் ஆகிய 7 பேர் கூட்டாக சேர்ந்து ராமலிங்கத்தை ஏமாற்றியது தெரியவந்தது.

இதை அடுத்து அவர்களின் மொபைல் எண்ணை வைத்து போலீசார் தேடினர். ஈரோடு அருகே அவர்கள் பதுங்கியிருப்பது தெரியவந்தது.

அங்கு சென்ற போலீசார், சதீஷ் குமாரின் கூட்டாளிகள் 6 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ராமலிங்கத்திடம் வாங்கிய, 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் இரிடியம் என கொடுக்க வைத்திருந்த பித்தளை குடத்தையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மோசடி கும்பலின் தலைவன் சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

 
Published by:Manoj
First published:

Tags: Cheating, Crime | குற்றச் செய்திகள், Fraud, Iridium

அடுத்த செய்தி