தமிழகத்துக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு!

தமிழகத்துக்கு 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரம் ஒதுக்கீடு!
கோப்புப்படம்
  • News18
  • Last Updated: October 2, 2019, 12:48 PM IST
  • Share this:
எதிர்வரும் ரபி பருவத்திற்கு தமிழ்நாட்டிற்கு தேவையான 6 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உரத்தை மத்திய அரசு உதுக்கீடு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் ரபி பருவத்திற்கு தேவையான உரத்தினை வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பேரில் 6 லட்சம் மெட்ரிக் டன் உரத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் உள்ள உர இருப்பை 'உழவன் கைபேசி' செயலி மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையை எடுத்துச்சென்று அருகில் உள்ள உர விற்பனை நிலையங்களில் தங்களுக்கு தேவையான உரத்தை பெற்று பயனடையலாம் எனவும் அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காந்தியின் அரிய புகைப்படங்கள்:

First published: October 2, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading