சென்னையிலிருந்து இதுவரை 6 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்..!

சென்னையிலிருந்து இதுவரை 6 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர்..!

சொந்த ஊர் செல்லும் மக்கள் (கோயம்பேடு பேருந்து நிலையம்)

முன்பதிவு டிக்கெட் இல்லாததால் நின்று கொண்டேயாவது சென்று சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடி விடுவதென பலரும் உறுதியுடன் செல்வதைக் காண முடிந்தது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து சிறப்பு பஸ்களில் இதுவரை 6 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். பொங்கலுக்கு முந்தைய நாள் ஊருக்குச் செல்லவேண்டும் என ஏராளமானோர் புறப்பட்டதால் நேற்றிரவு பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  சென்னையில் வசிக்கும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட பஸ்களிலும், ரயில்களிலும் சாரை, சாரையாய் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.சென்னையில் தாம்பரம், தாம்பரம் சானடோரியம், மாதவரம், பூந்தமல்லி, கேகே நகர், கோயம்பேடு ஆகிய 6 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக மக்கள் படையெடுப்பதால் ரயில்களிலும் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் கூட்டம் அதிகரித்தது. முன்பதிவு டிக்கெட் இல்லாததால் நின்று கொண்டேயாவது சென்று சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடி விடுவதென பலரும் உறுதியுடன் செல்வதைக் காண முடிந்தது.

  வார விடுமுறையை தொடர்ந்து பொங்கல் பண்டிகை வருவதால் பெரும்பாலான மக்கள் வெள்ளிக்கிழமை மாலை முதலே சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்ததாலும் சிறப்பு பஸ்கள் கடந்த 10ம் தேதியில் இருந்தே இயங்குவதாலும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெரிசல் குறைந்தே காணப்பட்டது.

  நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறந்த ஏற்பாடுகளை செய்திருப்பதாக தெரிவித்தார்.

  சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு மூன்றாவது நாளான நேற்று இரவு வரை 11 ஆயிரத்து 724 பேருந்துகளில் 5 லட்சத்து 86 ஆயிரம் பயணிகள் வெளியூர் சென்றுள்ளனர்.
  Published by:Sivaranjani E
  First published: