கிருஷ்ணகிரி அருகே பேருந்து மீது மோதிய ஆம்னி கார்: 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே பேருந்து மீது மோதிய ஆம்னி கார்: 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

விபத்துக்கு உள்ளான கார்

அதிகாலை நடந்த இந்த கோர விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 • Share this:
  கிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்னால் ஆம்னி கார் மோதிய விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த எட்டு பேர் பெங்களூரிலுள்ள ஒன்டர்லா சுற்றுலா தளத்திற்கு ஆம்னி கார் மூலம் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே வந்துகொண்டிருந்தனர்.

  அப்போது, தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்ற அரசு பேருந்தில் இருந்து இறங்கிய தேவராஜ் என்பவர் சாலையை கடக்க முயன்றார். அவர் மீது மோதியது ஆம்னி கார், கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த அரசு பேருந்திற்கு பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது.

  இந்த விபத்தில் சாலையை கடந்த தேவராஜ் மற்றும் ஆம்னி காரில் வந்த பிரசாந்த்,லிங்கா, சுரேந்தர், சிவகுமார் மற்றும் அதன் ஓட்டுநர் நந்து உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கௌதம், பரணி, அசோக் ஆகிய 3 பேரும் படுகாயமடைந்தனர்.

  இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டினம் காவல்துறையினர் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த 6 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.

  மேலும் படிக்க... Budget 2021: பட்ஜெட் இன்று தாக்கல்... எதிர்பார்ப்புகள் என்னென்ன?

  இன்று அதிகாலை நடந்த இந்த கோர விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
  Published by:Suresh V
  First published: