அயன் பட பாணியில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு பசை வடிவில் கடத்தி வரப்பட்ட 6 கிலோ தங்கம்

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

சார்ஜாவிலிருந்து கோவைக்கு கடத்திவரப்பட்ட 6 கிலோ தங்கம் நுண்ணறிவு பிரிவுத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

  • Share this:
சார்ஜாவில் இருந்து வந்த கோவைக்கு பசை வடிவில் உடலில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 2.99 கோடி ரூபாய் மதிப்புடைய  6,117.8 கிராம் தங்கத்தை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆறுமுகம், ஹாஜி அப்துல் ஹமீது, மாதவன், சுலைமான், ராஜேந்திரன், தீன் இப்ராஹிம்ஷா ஆகிய  தமிழகத்தை 6 பேரிடம் இருந்து 7,908 கிராம் பசை வடிவிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தங்கத்தை பேஸ்ட் வடிவில் மாற்றி ஆடைகளில் மறைத்து வைத்து கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. 6 பேரிடமும் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும், விமான நிலைய நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளும் பசைவடிவில் இருந்து தங்கத்தை பிரித்தெடுத்தனர். மொத்தம் 6,117.8 கிராம் தங்கமானது பசை வடிவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது.

இதன் இந்திய மதிப்பு 2,99,16,000 ரூபாய் என வருவாய் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கம் கடத்தப்பட்டது குறித்து 6 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக தங்கத்தை பசை வடிவில் மாற்றி கடத்தப்படுவது அதிகரித்துள்ளது. தங்கம் கடத்தல் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே பசை வடிவில் கடத்தி வருபவர்களை பிடிக்க முடிகின்றது. வழக்கமான பரிசோதனை முறைகளில் பசை வடிவிலான தங்கத்தை கண்டு பிடிப்பதில் சிரமம் இருப்பதாக கூறப்படுகின்றது. இது பசை வடிவிலான தங்கக் கடத்தல் விமான நிலைய நுண்ணறிவு பிரிவினருக்கும், வருவாய் புலனாய்வு பிரிவினருக்கும் பெரும் சவாலாக சமீப காலமாக மாறி வருவது குறிப்பிடதக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கோவை விமான நிலையத்தில் தங்கம் கடத்தி வந்து பிடிபட்ட 6 பேரும் வெவ்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் என்ற நிலையில்,  இவர்களை ஓரே நபர் அனுப்பினாரா அல்லது வேறு வேறு நபர்கள் அனுப்பி இருக்கின்றனரா என்பது குறித்தும் இங்கு யாருக்காக தங்கத்தை கொண்டு வந்தார்கள் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Published by:Karthick S
First published: