6 பேர் மாற்றுத்திறனாளிகள்: கண்கலங்க வைக்கும் குடும்பம்!

வறுமையில் தவிக்கும் குடும்பத்தை மீட்க அரசு உதவ வேண்டும் என்பதே உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எதிர்பார்ப்பு.

Web Desk | news18
Updated: July 2, 2019, 4:39 PM IST
6 பேர் மாற்றுத்திறனாளிகள்: கண்கலங்க வைக்கும் குடும்பம்!
வறுமையில் தவிக்கும் குடும்பத்தை மீட்க அரசு உதவ வேண்டும் என்பதே உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எதிர்பார்ப்பு.
Web Desk | news18
Updated: July 2, 2019, 4:39 PM IST
மயிலாடுதுறை அருகே ஒரே குடும்பத்தில் 6 பேர் மாற்றுத்திறனாளிகளாக இருப்பது காண்போரை கண்கலங்க வைக்கிறது.

ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளியாக பிறந்தாலே, அந்தக் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துவிடும். ஆனால் நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள திருமணஞ்சேரி கிராமத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள 6 பேரும் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர்.

திருமணஞ்சேரியில் வசிக்கும் 53 வயதான முரளி, 3 அடி உயரமே உள்ள மாற்றுத்திறனாளி. அதேபோல அவரது சகோதரர்கள் ரகு, பாலாஜி, சகோதரி லெட்சுமி ஆகியோரும் குறைவான உயரம் கொண்டவர்கள். இவரது தாயார் வசந்தா, அவரது சகோதரி லட்சுமி ஆகியோர் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள். முரளியின் தந்தை நாராயணன், பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றி வந்தார்.

ஒரே குடும்பத்தில் 6 பேர் மாற்றுத்திறனாளிகள்


நாராயணன் இருக்கும் வரை அவரது குடும்பத்தை காப்பாற்றி வந்த நிலையில், கடந்த 2001-ம் ஆண்டில் அவர் இறந்துவிட்டார். இதனால், குடும்பமே வறுமையில் வாடி வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் உதவித் தொகையை அவர்கள் பெற்றுவந்த நிலையில், இளம் சகோதரர் பாலாஜி நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக் குழுவில் இருந்த உறுப்பினர்கள் சரிவர பணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், 3 பேரின் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டது.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதால், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், கடைவைப்பதற்கு உதவியும் செய்ய வேண்டும் என்று முரளி கோரிக்கை விடுக்கிறார்.

வறுமையில் தவிக்கும் குடும்பத்தை மீட்க அரசு உதவ வேண்டும் என்பதே உறவினர்கள் மற்றும் நண்பர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Also see... தண்ணீரின்றி தவிக்கும் சிட்லப்பாக்கம் மக்கள்: காசு கொடுத்தும் சுகாதார நீர்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 2, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...