நாட்டையே உலுக்கிய மைசூரு பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் சிக்கிய தமிழர்கள்!

mysuru gang rape

நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
கடந்த சில நாட்களுக்கு முன் மைசூருவில் எம்.பி.ஏ மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த ஆறு பேரை கர்நாடக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள சாமுண்டி மலைப்பகுதி அருகே கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி இரவு 7.30 மணியளவில் ஆள் அரவமற்ற தன்னந்தனிமையான பகுதியில் ஆண் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 23 வயதாகும் எம்.பி.ஏ மாணவி ஒருவரை 6 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. குடிபோதையில் இருந்த அந்த கும்பல் முதலில் 3 லட்ச ரூபாய் பணம் கேட்டு இருவரையும் மிரட்டி இருக்கின்றது. மாணவியின் தொலைபேசியில் இருந்து அவருடைய தந்தைக்கு கால் செய்து பணம் எடுத்துவருமாறு பேசியிருக்கின்றனர்.

பின்னர் அந்த ஆண் நபரை கட்டை, கம்பி போன்ற ஆயுதங்களால் அடித்து உதைத்த அந்த கும்பலைச் சேர்ந்த 6 பேரும் 23 வயது மாணவியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்ததோடு அதனை வீடியோவாகவும் எடுத்து வைத்திருக்கின்றனர். பின்னர் இது குறித்து காவல்துறையினரிடம் தெரிவித்தால் அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதாக மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றனர்.

சுமார் 6 மணி நேரம் மயக்கத்தில் இருந்த ஆண் நண்பர் சுயநினைவை எட்டிய பின்னர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். போலீசாரை சம்பவ இடத்துக்கு சென்று இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பாதிக்கப்பட்ட மாணவி மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர், இவர் கர்நாடக பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

Also Read: மைனர் மகள்களை கடைக்காரரின் காம இச்சைக்கு தாரைவார்த்த தாய் – சிக்கிய 50 வீடியோக்கள்!

இந்த கூட்டு பாலியல் சம்பவம் நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கர்நாடக மாநிலத்துக்கு தலைகுணிவை ஏற்படுத்திய நிலையில் அரசியல் ரீதியான அழுத்தமும் ஏற்பட்டதையடுத்து இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் அவரின் ஆண் நண்பரிடம் இருந்து பெற்ற தகவல்களுடன் சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்களையும் வைத்து தமிழகம், கேரளாவில் குற்றவாளிகளை தேடி வந்தனர். சம்பவத்தில் தொடர்புடையவர்கள் தமிழில் பேசியிருந்தது இந்த வழக்கில் முக்கிய துருப்புச்சீட்டாக இருந்தது. அத்துடன் சம்பவ இடத்தில் இருந்து மது பாட்டில்களும், பேருந்து பயண சீட்டுகளும் கைப்பற்றப்பட்டன.. இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் முதலில் கைது செய்தனர். ஒருவர் மட்டும் தலைமறைவாக இருந்த நிலையில் தற்போது அவரையும் கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர்.  அவிநாசி அடுத்த ஆலந்தூர் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த பேபி (எ)விஜயகுமார் (26) என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  இதில் ஒருவர் சிறார் என கூறப்படுகிறது.  கைதானவர்கள்  20 முதல் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என தெரியவந்திருக்கிரது.

Also Read:   தலித் தம்பதியினர் மைனர் மகளுடன் மரத்தில் கட்டி வைத்து அடித்த கொடூரம்!

கைது செய்யப்பட்டவர்கள் ஓட்டுநர், தச்சர், வயர்மேன் போன்ற பணிகளை செய்து வருபவர்கள். இதில் ஓட்டுநர் அடிக்கடி மைசூருவில் உள்ள குடோனுக்கு பொருட்களை ஏற்றி வருவதும், அப்போது தனது நண்பர்களையும் துணைக்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தவர். சம்பவத்தின் போது லோடு இறக்க வந்த இடத்தில் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த சம்பவம் இவ்வளவு பெரிய விஷயமாக மாறும் என அவர்கள் நினைக்கவில்லை. ஆனால், மொபைல் போன் சிக்னல்களை ஆராய்ந்து திருப்பூரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு கூட்டுப் பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Arun
First published: